மாதவிடாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி !!

மாதவிடாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி !!

விழிப்புணர்வு 

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பொது சுகாதார பிரிவும், இளம் இந்தியர்கள் அமைப்பும் இணைந்து உலக மாதவிடாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்டையாம்பட்டியில் நடத்தின.
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பொது சுகாதார பிரிவும், இளம் இந்தியர்கள் அமைப்பும் இணைந்து உலக மாதவிடாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்டையாம்பட்டியில் நடத்தின. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஆட்டையாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஆட்டையாம்பட்டி நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் குணாளன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில் துறையை சேர்ந்த மாணவ, மாணவிகளின் நடனம் மூலம் மாதவிடாய் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து விளக்கினர். மேலும் இதுகுறித்து அந்த பகுதி மக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை துறையின் உதவி பேராசிரியர்கள் தீபிகா, விக்னேஸ்வரா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story