மனநலம் பாதிக்கப்பட்ட பெண், உறவினரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண், உறவினரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உறவினரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

மனநலம் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் பகுதியில் சுற்றித் திரிந்த பெண்ணை மீட்டு அவரின் உறவினருடன் அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த காமாட்சி வயது -35 என்ற பெண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, பெண் தலைமைக் காவலர் லீலா ஆகியோர்கள் கடந்த 13.10.2023 அன்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், காமாட்சிக்கு மனநல மருத்துவர் மூலம் வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காமாட்சியிடம் விசாரணை செய்து, அவரது உறவினரான பெரம்பலூர் மாவட்டம். S.குடிக்காடு கிராமத்தை சேர்ந்த பச்சையம்மாள் என்பவரிடம் நல்லமுறையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி அவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து மற்றும் அவரது குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story