பேரூராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு; மார்க்சிஸ்ட் கம்யூ., கண்டனம்

பேரூராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பு; மார்க்சிஸ்ட் கம்யூ., கண்டனம்
சாந்தகுமார்
பேரூராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிள்ளியூர் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கிள்ளியூர் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சாந்த குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 25 ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கவும், 10 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் திட்டமிட்ட பட்டுள்ளது. இது கிராம ஊராட்சிகளில் நேரடியாக மக்களிடம் இருக்கும் அதிகாரத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் செயல் ஆகும். அண்டை மாநிலமான கேரளத்தில் பேரூராட்சிகளே இல்லை. கிராம ஊராட்சிகவுன்சிலே திட்டமிட்டு வளச்சி பணிகளை மேற்கொள்கின்றன. குமரி மாவட்டத்தில் வருவாய் கிராமங்களை அதிகரித்து தாலுகா எண்ணிக்கையை ஆறாக ஏற்கனவே அதிகரிக்க பட்டுள்ளது. இந்த நிலையில், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பத்து ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

பேரூராட்சி மண்டல இயக்குனரக முன்மொழிவின்படி மத்திகோடு, திப்பிறமலை ,பாலூர், நட்டாலம், கொல்லஞ்சி ஊராட்சிகள் அருகிலுள்ள பேரூராட்சியோடு இணைக்க பட்டால் மூன்று ஊராட்சிகளை கொண்டு கிள்ளியூர் ஒன்றிய கவுன்சில் செயல்பட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.. எனவே கிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும் அரசின் திட்டத்தை திரும்ப பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூர் கிழக்கு வட்டார கமிட்டி சார்பில் வேண்டுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story