மே - 1ல் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்

நாளை மே 1 அரசு விடுமுறை தினம் என்பதால் மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நாளை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.காலை 8 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.மேலும் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், நண்பகல் 11 மணியிலிருந்து மாலை 5 வரையிலும், இரவு 8 லிருந்து 10 வரையில் 7 நிமிடத்திற்கு ஒருமுறையும், இரவு 10 லிருந்து இரவு 11 மணி வரையில் 15 நிமிடத்திற்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story