மேட்டுப்பாளையம் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மேட்டுப்பாளையத்தில் நடந்த அதிமுக சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நீலகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் கலந்துகொண்டார்.

மேட்டுப்பாளையத்தில் அதிமுக சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.இதில் நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், மேட்டுபாளையம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஓ.கே சின்ராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story