மேட்டூரில் அதிமுக சார்பில் 52-ம் ஆண்டு துவக்க விழா

மேட்டூரில் அதிமுக சார்பில் 52-ம் ஆண்டு துவக்க விழா

மேட்டூர் அதிமுக துவக்க விழா 

மேட்டூரில் அதிமுக 52-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது


சேலம் மாவட்டம், மேட்டூர், சின்னபார்க் முன்பு அதிமுக,வின் 52-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திரு உருவ படத்திற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அதிமுக, கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் சேலம் புற நகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் லலிதா சரவணன், அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு மாநில தலைவர் சம்பத் குமார், அதிமுக கவுன்சிலர்கள் கிருஷ்ணன், கலா ரமேஷ், கலையரசி, லாவண்யா, செல்வராணி மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story