மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48 அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.86 அடியில் இருந்து 48.36 அடியாக உயர்ந்துள்ளது
தமிழக கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த மூன்று தினங்களாக வினாடிக்கு 4 ஆயிரம் கன அடிக்கும் கீழ் குறையாமல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் அணைக்கான நீர்வரத்தை காட்டிலும் திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்னும் ஒரு சில தினங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நடபாண்டு குடிநீர் தேவை பூர்த்தி செய்ய போதுமான அளவு தண்ணீர் மேட்டூர் அணையில் இருப்பு உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் நீர்இருப்பு 16.79 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 4,288 கன அடியிலிருந்து 4,114 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags
Next Story