தீபாவளி: மேட்டூரில் களை கட்டிய ஆட்டுச் சந்தை.

தீபாவளி: மேட்டூரில் களை கட்டிய ஆட்டுச் சந்தை.

ஆடுகள் விற்பனை 

மேட்டூர் அருகே கொளத்தூர் கால்நடை வாரச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றது

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாளன்று கால்நடை வார சந்தைக்கு சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது. வெள்ளாடு கெடாய் 10,000 முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடும் 7,000 முதல் 25,000 வரை விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக கொளத்தூர் கால்நடை வார சந்தையில் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கால்நடை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story