மேட்டூர் : மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி.

மேட்டூர் : மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி.

பலியான ஆடு 

சேலம் மாவட்டம்,மேட்டூர் அடுத்த நங்கவள்ளி பெரிய சோரகைபகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவகுமார். இவர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். தனக்கு சொந்தமான ஆடு மாடுகளை மேய்த்து விட்டு மாலை வழக்கம் போல் வீட்டுக்கு அருகே உள்ள மாட்டு கொட்டையில் கால்நடைகளை அடைத்து வைத்து விட்டு உறங்கச் சென்று விட்டார். காலை ஆட்டுக்கொட்டைக்கு வந்து பார்த்தபோது மர்ம விலங்கு கடித்து இரண்டு செம்மறி ஆடுகள் பலியானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சிவகுமார் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் மர்ம விலங்கின் கால் தடம் பதிவாகியுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக நங்கவள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம விலங்கு சுற்றி திரிவதால் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். எனவே பொது மக்களின் அச்சத்தை போக்க சி.சி.டிவி, கேமரா பொருத்தி கூண்டு வைத்து மர்ம விலங்கை பிடித்து அடர்ந்த வனப்பகுதிகள் கொண்டு சென்று விட வேண்டும் என வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story