மேட்டூர் : பலத்த சூறை காற்று மழை - 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மேட்டூர் : பலத்த சூறை காற்று மழை - 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

சேதமடைந்த வாழைமரங்கள் 

மேட்டூர் அருகே கொளத்தூரில் பலத்த சூறை காற்றுடன் பெய்த மழையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தண்டா, பெரிய தண்டா, நீதிபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிட்டுள்ளனர். கதலி, செவ்வாழை, பூவன் போன்ற வாழைகள் பயிரிடப்பட்டுள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகாவிற்கும் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது

. குழை தள்ளிய வாழை விற்பனைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் பலன் தரும் நிலையில் இருந்த 5000 க்கு அதிகமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. வாழைக்குழைகள் சேதமடைந்தன. இதில் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். தமிழக அரசு செவ்வாழை மரம் ஒன்று இருக்கு ரூபாய் 200 ,கதலி மற்றும் பூவன் வாழைக்கு மரம் ஒன்றுக்கு ரூ.150 நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story