பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் 

மேட்டூரில் மக்களவை தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 382 வி.வி. பாட் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அனைத்து கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள,மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் 316 வாக்குச்சாவடிகள் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஈச்சர் வாகனம் மூலம் முதல் கட்டமாக நேற்று 382 வி.வி.பாட் இயந்திரங்கள் மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் ,சார் ஆட்சியர் பொன்மணி, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் வாகனத்தின் சீல் அகற்றப்பட்டு பள்ளியின் அறையில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது.

பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காவலர்கள், அனைத்து கட்சியினர் முன்னிலையில் வி.வி.பாட் வைக்கப்பட்ட அறையை பூட்டி வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் வட்டாட்சியர் விஜி ,காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ,வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story