மேட்டூர் : காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மேட்டூர் : காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தர்ப்பணம் 

மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் காவிரி படித்துறைகளில் ஆடிப்பெருக்கு திருவிழா ,ஆடி அமாவாசை, தை அமாவாசை ,மஹாளய அமாவாசை தினங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தை அமாவாசை தினமான இன்று சேலம்,நாமக்கல், தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து பொது மக்கள் குடும்பத்தினருடன் மேட்டூருக்கு வந்தனர் .இவர்கள் மேட்டூர் அணையின் காவிரி படித்துறைகளில் புரோகிதர்களைக் கொண்டு ஆற்றில் புனித நீராடி, வேத விற்பன்னர்களைக் கொண்டு வேத மந்திரங்களைச் சொல்லி யாகம் வளர்த்தனர்.பின்னர் முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி எள்ளுடன் தண்ணீர் விட்டு ஆற்றில் பிண்டம் விட்டு கரைத்து வழிபாடு செய்தனர்.

Tags

Next Story