திருப்பூரில் சமுதாய கழிப்பிட கட்டிடத்தை மேயர் திறந்து வைப்பு
மேயர் திறந்து வைப்பு
திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பிட கட்டிடத்தினை மேயர் தினேஷ்குமார் நான்காவது மண்டல தலைவர் இல. பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்குட்பட்ட 41-வது வார்டு பகுதியில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தந்தை பெரியார் நகர் பகுதியில் 36.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக் கழிப்பிடம் கட்டப்பட்டு தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர் இல. பத்மநாபன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
அப்போது துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், இளநிலை பொறியாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story