எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது முழு உருவ சிலைக்கு அதிமுக எம்எல்ஏ சுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி வட்ராம்பாளையம் பகுதியில் சேலம் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஏ.பி. சிவகுமாரன் தலைமையில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் கலந்து கொண்டு அதிமுக கட்சி கொடியேற்றி எம்ஜிஆரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். அப்போது காவேரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி அல்லிராணி, வார்டு உறுப்பினர்கள்,அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்

Tags

Next Story