சேலம்: எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

சேலம்: எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

சேலத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் 

சேலத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பூங்காவில் உள்ள மணிமண்டபத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் அமைப்பு செயலாளர் செம்மலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் பன்னீர் செல்வம் , முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம். கே . செல்வராஜூ ரவிச்சந்திரன், சக்திவேல், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மோகன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story