அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
விருதுநகரில் அமமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

எம்ஜிஆரின் 107வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் கருமாரி மடம் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஒன்றுகூடி பட்டாசுகள் வெடித்தும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

Tags

Next Story