அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா 

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாட்டப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 - வது பிறந்தநாள் விழா ,சேலம் மாவட்டம் , இளம்பிள்ளை பகுதியில் வீரபாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ,நோட் ,பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பேரூர் செயலாளர் கிருஷ்ணன், அவைத்தலைவர் வரதராஜ், செயலாளர் துளசிராஜன், இணைச்செயலாளர் மல்லிகா பழனிசாமி, துணைச் செயலாளர்கள் சேட்டு நடராஜ், சாந்தி ,பொருளாளர் முருகன், பேரூர் எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன் மற்றும் பழனிச்சாமி, மணிவாசகம் ,ராக்கிப்பட்டி கிருஷ்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story