எம்ஜிஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

நாமகிரிப்பேட்டையில் அதிமுக., சார்பில், எம்ஜிஆர்.,ன் 107வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

திமுக., ஆட்சியில் அனைத்து அரசு பள்ளி முன்பும், கஞ்சா விற்பனை அமோகம்: முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில் அதிமுக சார்பில், எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், திமுக., ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி முன்பு கஞ்சா விற்பனை நடக்கிறது. இதனால், பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பவே பெற்றோர்கள் பயப்படுகின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். ஆளும் கட்சி அராஜகத்தால் கஞ்சா எங்கேயும் கிடைக்கிறது. கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டிய காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. எம்ஜிஆர்., சத்துணவு திட்டம் கொண்டு வந்தார். அம்மா பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால், கருணாநிதி ஆட்சி, இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சியில் பள்ளியில் படிக்கிறவர்கள் எல்லாம் கஞ்சா அடிங்க எனச் சொல்லி மாணவர்கள் எல்லாம் கஞ்சாவிற்கு அடிமையாகும் வகையில் இந்த ஆட்சி கேடு கெட்ட ஆட்சியாக நடைபெற்று வருகிறது.

கஞ்சாவால் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. அம்மா கொண்டு வந்தார் என்பதற்காக, அவர் கொட்டு வந்த திட்டங்களை எல்லாம் இன்றைக்கு திமுக ஆட்சி வந்த உடன் நிறுத்திவிட்டனர் என்றார். நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story