எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

சங்ககிரி அருகே அரசிராமணியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சி குள்ளம்பட்டி பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அரசிராமணி பேரூராட்சி நகரச் செயலாளர் காளியப்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டம்,பெண்களுக்கு தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டார். மேலும் அவர்களை தொடர்ந்து அவர்களது வழியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆட்சியிலும் தொடர்ந்து மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தார், மேலும் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 7.5% உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் கொண்டு வந்து சாதனை செய்த ஆட்சி அதிமுக ஆட்சி என்றும் தற்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி தேர்தல் வாக்குறுதலில் அளித்த எதையும் நிறைவேற்றாமல் தமிழக மக்களை வஞ்சித்து கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து பேசிய சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்ட அவர் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டு மக்கள் மீது அக்கறையில்லாமல் தனது குடும்ப நலனில் அக்கறை செலுத்தி வருவதாகவும் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பள்ளி அருகில் கஞ்சா என சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டிய அவர் சொத்து வரி, குடிநீர் வரி , மின்சார கட்டணம் உள்ளிட்ட வரி உயர்வால் மக்கள் துயரத்தில் உள்ளதாகவும் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் நிறுத்திவிட்டு மக்களை வஞ்சித்து வருவதாகவும் தெரிவித்தார்... இதனைத் தொடர்ந்து திமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் அககட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா சால்வை அணிந்து வாழ்த்தி வரவேற்றார். அப்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் வேலுமணி, சேலம் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி, செயலாளர் ஏ.பி. சிவகுமாரன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா, உட்பட அதிமுக நகர,ஒன்றிய,பேரூர் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story