விக்கிரவாண்டியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பி ஊராட்சியில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பி ஊராட்சியில் நடைபெற்றது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.முத்தமிழ்செல் வன், ஒன்றிய செயலாளர்கள் முகுந்தன், ராஜா, பேட்டை முருகன், பேரூராட்சி, நகர செயலாளர் பூர்ணராவ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச் சருமான சி.வி.சண்முகம் எம்.பி. தலைமை தாங்கி பேசும்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்து மக்களுக்கான நலத்திட்டங்களை மு.க.ஸ்டாலின் அரசு செய்யவில்லை.
ஆனால் கடந்த 10 ஆண்டு களில் அ.தி.மு.க. கொண்டு வந்த அனைத்து மக்கள் நல திட்டங் களை நிறுத்தி உள்ளனர். பால் முதல் அரிசி வரை அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் 3 மடங்கு உயர்ந்துள்ளது. பஸ், மின்கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், நில முகமதிப்பு ஆகி யவை 100 சதவிகிதம் உயர்ந்து விட்டன. பள்ளி வளாகம் முதல் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா சாக்லேட், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் மக்களைப்பற்றி சிந்திக்காத தி.மு.க.அரசுக்கு எச்சரிக்கை மணி அடிக்கின்ற வகையில் நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் என்றார்.