எம்ஜிஆர் நினைவு தினம்: அதிமுகவினர் அமைதி ஊவலம்

அதிமுகவினர் ஊர்வலம்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவு தினத்தை ஒட்டி திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொன் சரஸ்வதி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கி 4 ரக வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலை அருகே பேராணி நிறைவடைந்தது. இதில்250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடுமுன்னாள் சட்டமன்றஉறுப்பினரும் அதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமை வகித்தார், அதிமுக மாவட்ட துணை செயலாளர் இரா முருகேசன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராமலிங்கம்,ஒன்றிய செயலாளர்கள் அணிமூர் மோகன்,மல்லசமுத்திரம் ராஜா,எலச்சிபாளையம் சக்திவேல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்லப்பன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் பரணிதரன்முன்னாள் தொகுதி கழக இணை செயலாளர் முரளிதரன்,நகர துணைச் செயலாளர்நகர்மன்ற உறுப்பினர் ராஜவேல்,நகர் மன்ற உறுப்பினர்கள் மல்லிகா,
விஜிய பிரியா முனியப்பன்,அம்மா பேரவை நகரச் செயலாளர் கார்த்திகேயன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ராமமூர்த்தி,மற்றும் மகளிர் அணி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப அணி என பல்வேறு சார்பு அணிநிர்வாகிகள் என சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
