எம்.ஜி.ஆர். நினைவு நாள் : தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் அறிக்கை

எம்.ஜி.ஆர். நினைவு நாள் : தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் அறிக்கை
X

எம்.ஜி.ஆர். நினைவு நாள்

திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக கழக நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் 36-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 24.12.2023 அன்று காலை 8.00 மணியளவில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக, திருச்சி திருவெறும்பூர் BHEL நுழைவு வாயிலில் அமைந்துள்ள MGR திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு, வட்ட கழக, MGR மன்றம், அம்மா பேரவை, MGR இளைஞர் அணி, மகளீர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினா நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் அணி, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு. வர்த்தக அணி, கலைப்பிரிவு, மற்றும் செயல்வீரர்கள் வீராங்கணைகள் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் நமது கழகத்தினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் எம்ஜிஆர் திருவுருவ சிலை மற்றும் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளித்திட வேண்டுமென கேட்டு கொண்டுள்ளார்.

Tags

Next Story