மைக் ஆப் கலாச்சாரத்தை நிறுத்த வேண்டும்: மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாக்கூர்
சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: நாடாளுமன்றத்தில் பதினேலாவது கூட்டத் தொடரில் எவ்வாறு மைக்கை உறுப்பினர்கள் பேசும்போது துண்டிக்கப்பட்டதோ.
அதேபோல் தற்பொழுது 18 வது நாடாளுமன்றத்திலும் அதே சக்திகள் மைக் ஆப் செய்யப்படும் அரசியலை நிறுத்த வேண்டும். பல்வேறு பிரச்னைகளை ஆக்கபூர்வமாக பேச உள்ள நிலையில் இந்த கலாச்சாரத்தை நிறுத்த வேண்டும். நீட் சம்பந்தமாக வரும் திங்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச உள்ளார். சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்த கேள்விக்கு: சாத்தூரில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தது வருத்தமளக்கிறது.
இதே போல் நிகழ்வுகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் முழு முயற்சி எடுத்து வருகிறது. விருதுநகர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட போது அவர் தற்போது விபத்துள்ள பகுதியில் சம்பவங்களை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார். பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிந்தவர்களுக்கு வேண்டிய மருத்துவ மற்றும் நிவாரண உதவிகள் செய்து வரப்படுகிறது.
மதுரை விமான நிலைய டோல்கேட் விலை உயர்வு குறித்த கேள்விக்கு: மதுரை விமான நிலைய டோல்கேட் மற்றும் அனைத்து சுங்க சாவடிகளிலும் கட்டணத்தை ஒன்றிய அரசு சாமானிய மக்களுக்கு எதிராக செயல்படுகின்றது. தமிழக மீனவர்கள் கைது குறித்த கேள்விக்கு: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து. நாடளுமன்றத்தில் குரல் கொடுப்போம், குறிப்பாக தமிழக எம்பிக்கள் கண்டிப்பாக இதற்கு எதிராக குரல் எழுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
பூரண மதுவிலக்கு குறித்த கேள்விக்கு: பூரண மதுவிலக்கு என்பது மாநிலத்தின் வருவாய் பொறுத்தே கோர முடியும். 1967 க்கு முன்பு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி களத்தில் பூரண மதுவிலக்கு இருந்தது. தற்போது காங்கிரஸ் ஆளும் தெலுங்கான போன்ற மாநிலங்களில் பூரண மதுவிலக்கு செயல்படுத்தப்படுகிறது.
மனதில் ராகுல் காந்திக்கு நடிகர் விஜய் வாழ்த்து கூறியது குறித்த கேள்விக்கு: நடிகர் விஜய் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தது அதற்கு அவர் நன்றி கூறியது ஒரு பரஸ்பர வாழ்த்தாகும். இதை அரசியலாக பார்க்க கூடாது என்றார்.
கள்ளச்சாராய விபத்தில் இறந்தவர்களுக்கான நிதி உதவி மற்றும் வெடி விபத்தில் இறந்தவர்களுக்கான நிதி உதவி குறித்த கேள்விக்கு: சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியும் கள்ளச்சாராய விபத்தில் இறந்தவர்களின் நிதியும் ஒப்பீடு செய்யக்கூடாது. இது விபத்து, அது ஒரு சம்பவம் அரசு பொதுவாக விபத்தில் பிறந்தவர்களுக்கு நிவாரணமாக நாலு லட்சம் ரூபாய் வழங்கும் .
அது போன்ற துயர நிகழ்ச்சிகளைசிவகாசி வெடிவிபத்துடன் ஒப்பிட கூடாது அது சரியாக இருக்காது என கூறினார்.