மிக்ஜாம் புயல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்
வந்தவாசியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் மிக்ஜாம் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், உணவு,வேட்டி, சேலைகளை வட்டாட்சியர் இரா.பொன்னுசாமி வழங்கினார்.
மிக்ஜாம் புயல் மழை காரணமாக, வந்தவாசி அடுத்த சளுக்கை உயர்நிலைப்பள்ளியில் 2 பழங்குடி இருளர் குடும்பங்களை சேர்ந்த 2 ஆண்கள், 3 பெண்கள், 4 குழந்தைகள் என 9 நபர்கள் தங்கவைக்கப்பட்டனர், விளாங்காடு கிராமத்தில் இருளர் வகுப்பைச் சார்ந்த 10 குடும்பங்கள் பாதுகாப்பாக விளங்காடு நடுநிலை பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
14 ஆண்களும், 20 பெண்கள் 11 குழந்தைகள் ஆக 45 நபர்கள் பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டனர். ராமசமுத்திரம் கிராமத்தில், பழங்குடி இருளர் வகுப்பைச் சார்ந்த 9 குடும்பங்கள் பாதுகாப்பாக பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் 12 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் 4 குழந்தைகள் ஆக 26 நபர்கள் பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வேட்டி சேலை, பாய், தலையணை மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது மற்றும் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. துணை வட்டாட்சியர் ஆனந்தகுமார், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், விஏஓ வெங்கிடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.