மிக் ஜாம் புயல்: பள்ளி மாணவன் உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உண்டியலில் சேமித்த பணத்தை வழங்கிய பள்ளி மாணவன். வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உண்டியலில் சேமித்த பணத்தை வழங்கிய பள்ளி மாணவன். வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அண்மையில் பெய்த புயல் மழை காரணமாக பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அவர்களுக்கு உதவி கரம் நீண்டு வருகிறது. இந்த வரிசையில் நிவாரண நிதியாக மணவாடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு மாணவன், ஹிதேஷ் தனது சகோதரியுடன் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை, ஊராட்சி மன்ற புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். மாணவரிடம் இருந்து உண்டியலை பெற்றுக் கொண்ட ஆட்சியர் தங்கவேல், மாணவனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து மாணவன் செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் நலனில் நானும் பங்கேற்க விரும்பி, கடந்த இரு மாதங்களாக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த சுமார் 600 ரூபாய் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியதாக தெரிவித்தார்.

Tags

Next Story