எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21 வது ஆண்டு பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா
திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவானது எம்.ஐ.இ.டி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர் அப்துல் ஜலீல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இவர் தன்னுடைய சிறப்புரையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கல்வியே மிக சிறந்த மூலதனமாக செயல்படுகிறது என எடுத்துக் கூறினார். மேலும் பட்டம் பெறுகின்ற மாணவர்கள் அனைவரும் இன்று வரை கல்லூரியோடு தொடர்பிலிருந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது போல் தற்பொழுது பட்டம் பெறுகின்ற மாணவர்களும் முன்னாள் மாணவர்களாக தங்களை இணைத்துக்கொண்டு கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவ்விழாவிற்கு அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழுமத்தின் தலைவர் (ISTE) முனைவர் பிரதாப்சிங்க் காகாசாஹெப் தேசாய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி 369 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மாணவர்களிடையே பட்டமளிப்பு விழா உரையாற்றினார்
. இவர் தன்னுடைய உரையில் இந்த போட்டி நிறைந்த உலகில் இன்றைய பொறியாளர்களுக்கான சவால்கள் என்ன அதை எதிர் கொள்வதற்கு தங்களை எவ்வாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என விரிவாக எடுத்துக் கூறினார். முன்னதாக இந்த வருடத்திற்கான நீதிபதி பக்கீர் முகமது சுழல் கோப்பையானது பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 369 மாணவர்கள் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றனர்.