கன்னியாகுமரியில் லேசான நில அதிர்வு

கன்னியாகுமரியில் லேசான நில அதிர்வு

பைல் படம்

கன்னியாகுமரியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு குண்டல், தெற்கு குண்டல், கலைஞர் குடியிருப்பு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் ஒரு சில வினாடிகள் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதை உணர்ந்த பொதுமக்கள் பயந்து வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்து ஆங்காங்கே திரண்டு நின்றனர். இந்த குறித்து வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர் சிவசுடலை மணி என்பவருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர்.

அவர் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடி வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அப்பகுதியில் வந்து வீடுகளில் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இது குறித்து அரசு தரப்பில் எந்த வித எச்சரிக்கையும் வரவில்லை. எனவே மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டால் தகவல் தெரிவிக்குமாறு கூறினர். இந்த அதிர்வின் காரணமாக பொருட்கள் எதுவும் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் வரை இது வந்த அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Tags

Next Story