தென்னக காசி கால பைரவருக்கு பால் அபிஷேகம்
தென்னக காசி கால பைரவர் கோயிலில் 39 அடி உயரம் கொண்ட காலபைரவர் சிலைக்கு 5001 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அடுத்த ராட்டை சுற்றி பாளையத்தில் தென்னக காசி எனப்படும் கால பைரவர் கோவில் உள்ளது. இந்த கோயிலின் சிறப்பம்சமாக நுழைவு வாயிலில் 39 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய கால பைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீ விஜய் ஸ்வாமிஜி மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் உலக நன்மை வேண்டி இன்று தென்னக காசி பைரவர் கோவில் 39 அடி உயரம் கொண்ட காலபைரவருக்கு 5001 லிட்டர் பால் அபிஷேகத்தை ஶ்ரீ விஜய் ஸ்வாமிஜி தலைமையில் நடைபெற்றது.
இந்தப் பால் அபிஷேகத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, ஆர் எம் பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். இந்த பால் அபிஷேகத்தை ஒட்டி ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழக முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.