பால்குட திருவிழா

பால்குட திருவிழா

திருவாலங்காடு மாம்புள்ளி நாகமுத்து மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.


திருவாலங்காடு மாம்புள்ளி நாகமுத்து மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாலங்காடு மாம்புள்ளி கிராமத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான நாகமுத்து மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி பால்குடம் மற்றும் காவடித் திருவிழா நடைபெற்றது. இதில், சக்தி கரகம் முன்வர ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், உடல், நாக்கில் அலகு குத்தியும் காவடி எடுத்து மாம்புள்ளி கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். இதில், பக்தர் ஒருவரின் உடலில் 50-க்கு மேற்பட்ட இடங்களில் இரும்பு கொக்கி மாட்டி அலகு குத்தி, அந்த கொக்கியை தாம்புக்கயிறு கட்டி உறவினர்கள் இழுத்துவர பக்தர் நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்தியது பார்ப்பவர்களை பக்தி பரவசத்தில் ஆழத்தியது. கோயிலின் முன்பு சக்தி கரகத்தை இறக்கி வைக்கும்போது, வாத்திய இசைக்கு ஏற்ப 7 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர்கள் வரை அருள்வந்து ஆடினர். தொடர்ந்து, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஊராட்சித் தலைவர் கதம்பவள்ளி சின்னையன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story