அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்
பால்குட ஊர்வலம்
சேலம் அஸ்தம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பிடாரியம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில் சித்திரைத்திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் நடைபெற்றது. தொடர்ந்து கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.
நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று (புதன்கிழமை) காலை அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் நடக்கிறது.
மாலை அக்னி கரகம், பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. 10-ந் தேதி சத்தாபரணம், 11-ந் தேதி காலை மஞ்சள் நீராட்டுதல், மதியம் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 17-ந்தேதி மாரியம்மன், பிடாரியம்மன், விநாயகருக்கு மறுபூஜையுடன் விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.