பால் விலையில் பாரபட்சம்; மதுரை மக்கள் அதிருப்தி

பால் விலையில் பாரபட்சம்; மதுரை மக்கள் அதிருப்தி

 பால் விலையில் பாரபட்சம் நீடிப்பதால் மதுரை மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பால் விலையில் பாரபட்சம் நீடிப்பதால் மதுரை மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மதுரையில் அதிகம் விற்பனையான ஆவின் கிரீன் மேஜிக் என்ற எஸ்.எம்., (நிலைப்படுத்தப்பட்ட பால்) பால் பாக்கெட்டை முடக்கி பிரீமியம் என்ற பெயரில் அரை லிட்டர் ரூ.28க்கு விற்பனை செய்கின்றனர். சென்னையில் அதே கிரீன் மேஜிக் பால் அரை லிட்டர் ரூ.22க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சமீபத்தில் கொழுப்பு சத்தை குறைத்தும், விலையை அதிகரித்தும் பால் பாக்கெட்டுகளில் பல மாற்றங்களை ஆவின் கொண்டு வந்தது.

இந்த நடவடிக்கை சென்னையில ஒருவிதமாகவும், மற்ற எல்லா மாவட்டங்களில் வேறு விதமாகவும் எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. நுாதன முறைகேடுஉதாரணமாக, மதுரையில் தினமும் 1.95 லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. இதில் எஸ்.எம்., எனும் கிரீன்மேஜிக் வகை பால் 60 ஆயிரம் லிட்டர் விற்பனையாகிறது. 4.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள இதன் விலை அரை லிட்டர் ரூ.22. இந்த பாக்கெட் திடீரென நிறுத்தப்பட்டு 'பிரீமியம் மில்க்' பாக்கெட் அரை லிட்டர் ரூ.28க்குவிற்கப்பட்டது.அதேநேரம் 'டிலைட்' என்ற பால் அரை லிட்டர் ரூ.22 க்கு விற்பனைக்கு வந்தது.

ஆனால் இதில் கொழுப்புச்சத்து 3.5 சதவீதம். முன்பிருந்த கிரீன்மேஜிக் பாலைவிட ஒரு சதவீத கொழுப்பு சத்து குறைந்தாலும் விலையில் மாற்றம் இல்லை. இது ஒரு வகையான நுாதன முறைகேடு என விமர்சனம் எழுந்தது. ஆனாலும் பிரீமியம் பாலையும், டிலைட் பாலையும் வாங்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.சென்னையில் இன்றும் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள கிரீன் மேஜிக் பால் பாக்கெட் அரைலிட்டர் ரூ.22 க்குத்தான் விற்கப்படுகிறது. இதனால் பிற மாவட்ட மக்களை ஆவின் ஏமாற்றுகிறது என சர்ச்சை எழுந்துள்ளது.மதுரை வாடிக்கை யாளர்கள் கூறியதாவது:கிரீன் மேஜிக் பால் என்பது ஆவின் பாலின் அடையாளமாக இருந்தது. தற்போது சென்னையில் மட்டும் அரை லிட்டர்ரூ.22க்கு கிடைப்பது மகிழ்ச்சி.

ஆனால் மதுரை உள்ளிட்ட பிற மாவட்ட மக்களுக்கு ஏன் கிடைப்பதில்லை. வேறு பாக்கெட் (டிலைட்) அரை லிட்டர் ரூ.22க்கு கொடுத்தாலும் அதில் ஒரு சதவீதம் கொழுப்பு சத்து குறைந்துள்ளது. இதேகொழுப்பு சத்து குறைவான பாலை சென்னை மக்களுக்கு ஏன் கொடுக்கவில்லை. அங்கு அதிகார வர்க்கத்தினர் உள்ளதால் ஆவினின் 'சித்து விளையாட்டு' பூதாகரமாகிவிடும் என்பதாலா. மாநிலம் முழுவதும் ஒரேமாதிரி விலையை நடைமுறைப்படுத்த வேண்டும், என்றனர்.

Tags

Next Story