குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கடத்தலை தடை செய்ய கோரிக்கை
மனு அளித்த மக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த முருங்கை பகுதி சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கன்னியாகுமாரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
வாழ்வச்ச கோஷ்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் விவசாய பகுதிகள் ஆகும். இந்த பகுதியில் குறுகிய சாலை வழியாக மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்த பஞ்சனங்குடி மலையில் மருதூர் குறிச்சி வருவாய் கிராமத்தில் விவசாய விவசாய நிலத்தில் இருந்து இரவு பகலாக கனிம வளம் கடத்தப்படுகிறது.
இதற்கு காரணமாக முருங்கை விளை, கப்பியறை, பள்ளியாடி வழியாக கனிம வளங்கள் கடத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கனிம வள கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.