கனிம வளம் நடத்திய வாகனங்கள் பறிமுதல்

கனிம வளம் நடத்திய வாகனங்கள் பறிமுதல்
கனிம வளம் கடத்திய வாகனங்கள்
இரணியல் பகுதியில் கனிம வளம் கடத்திய ஆறு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தோட்டியோடு பகுதியில் அரசு அனுமதி இன்றி கனிம வளங்கள் கடத்துவதாக மாவட்ட எஸ்பி-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையத்து எஸ் பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் தோட்டியோடு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் அனுமதி இன்றி லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மண் வெட்டி கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 5 டெம்போ , ஹிட்டாச்சி இயந்திரம் உட்பட ஆறு வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு, இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story