மினி பேருந்து மோதியதில் பாஸ்ட் புட் கடை சேதம்

சாத்தூரில் ஓட்டுனருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த மின் பேருந்து மோதி பாஸ்புட் கடை சேதமடைந்தது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சென்ற மினி பேருந்து சாலை ஓரத்தில் இருந்த பாஸ்ட் புட் கடையில் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழ ஒட்டம் பட்டியை சேர்ந்தவர் ராஜாக்கனி (38). இவர் சாத்தூரில் தனியார் மினி பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல பணிக்கு வந்த ராஜாக்கனி இரவு சாத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து மினி பஸ்ஸை ஒ.மேட்டுப் பட்டிக்கு பயணிகளுடன் ஒட்டி சென்று உள்ளார். இந்த நிலையில் ராஜாக்கனி ஒட்டி சென்ற மினி பேருந்து சாத்தூர் அடுத்து பெரிய கொல்லப்பட்டி விளக்கு அருகே வரும் பொழுது திடீரென ராஜாக்கனிக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்தை சரியாக இயக்க முடியாததால் பேருந்து நிறுத்த முயன்று உள்ளார்.

இந்த நிலையில் ராஜாக்கனியால் மினி பேருந்தை உடனடியாக நிறுத்த முடியாததால் சாலையோரத்தில் இருந்த பாஸ்ட் புட் உணவகத்தின் மீது மினி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாஸ்ட் புட் உணவகம் முற்றிலும் சேதம் அடைந்தன. மேலும் விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கும் 108 ஆம்புலன்ஸ்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் விபத்தில் காயம் அடைந்த மினி பேருந்து ஓட்டுனர் ராஜாக்கனி ,பேருந்தில் படியில் பயணம் செய்த குருநாதன் (19) மற்றும் ராஜேந்திரன் (55) ஆகிய மூன்று பேரையும் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குருநாதன் என்ற சிறுவனுக்கு சாத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மினி பேருந்து சாலையோரத்தில் இருந்த பாஸ்ட் புட் உணவகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story