மினி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டேரி பகுதியில் சாலையின் பக்கவாட்டு சுவரில் மோதி மினி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் பயணிகள் இந்த வாகனத்தில் பயணம் செய்த நபர்கள் ஈரோடு மாவட்டம் கௌந்தம்பாடி அடுத்த பி மேட்டுப்பாளையம், பவானி, குட்டி பாளையத்தை சேர்ந்த சுமார் 30 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து கொண்டு, இரண்டு மினி பேருந்துகளில் இரவு 7 மணிக்கு மேல்மருவத்தூர்க்கு சென்றுள்ளனர்.
இரண்டு மினி பேருந்துகளும் சென்று கொண்டிருக்கும் பொழுது, ஒரு மினி பேருந்து மட்டும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்புச் சுவர்களின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள அய்யாசாமி (45), மௌனிகா(19), செல்வி, லட்சுமி, சண்முகவள்ளி ஆகியோர் அதிக காயம் ஏற்பட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி மேல்சிகிச்சிக்காக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தக்சின் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தை குறித்து ஊத்தங்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படாமல் 17 பக்தர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி வருகிறது .