தனியார் பள்ளி பஸ் மோதியதில் மினி லோடு லாரி டிரைவர் பலி

X
காவல் நிலையம்
கள்ளக்குறிச்சி அருகே நயினார்பாளையம் குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் விஜய்,35; மினி லோடு லாரி ஓட்டுனர். இவர் நீலமங்கலம்- கள்ளக்குறிச்சி சாலையில் நேற்று மாலை 4:30 மணியளவில் மினி லோடு வாகனத்தை ஒட்டிச்சென்றார். கூத்தக்குடி கூட்ரோடு அருகே தனியார் திருமண மண்டபத்தை கடந்து வந்தபோது திரே வந்த தனியார் பள்ளி பஸ், மினி லோடு வாகனம் மீது மோதியது. இதில் மினி லோடு வாகனம் அப்பளம்போல் நொருங்கியது. இதில் டிரைவர் சீட்டிலேயே உடல் நசுங்கி நிலையில் விஜய்யை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags
Next Story
