விக்கிரவாண்டியில் மினிலாரி நடுரோட்டில் கவிழ்ந்தது

விக்கிரவாண்டியில் மினிலாரி நடுரோட்டில் கவிழ்ந்தது

விபத்து

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் மினிலாரி நடுரோட்டில் கவிழ்ந்த விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் இருந்து கிர்ணி பழங்களை ஏற்றிக் கொண்டு மினிலாரி ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டது. மினிலாரியை சேலத்தை சேர்ந்த ஜெகதீசன்(வயது 31) என்ப வர் ஓட்டினார். அந்த மினிலாரி நேற்று இரவு விக்கிர வாண்டி தெற்கு புறவழிச்சாலையில் சென்றபோது, திடீரென டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது,

இந்த விபத்தில் மினிலாரியில் இருந்த கிர்ணி பழங்கள் அனைத்தும் சாலையில் உருண்டு ஓடின. டிரைவர் ஜெகதீசன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் விரைந்து வந்து விபத்துக்குள்ளான மினிலாரி மற்றும் பழங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story