100% வாக்குப்பதிவு குறித்து மினி மாரத்தான் விழிப்புணர்வு

100% வாக்குப்பதிவு குறித்து மினி மாரத்தான் விழிப்புணர்வு

மினி மாரத்தான்

செங்கத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு குறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் மினி மாரத்தான் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் தேர்தலில் வாக்காளர்கள் தங்களது வாக்கினை 100 சதவீத பதிவு செய்ய மினி மாரத்தான் விழிப்புணர்வு போட்டி பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டது செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை இலக்காக வைத்து நடத்தப்பட்ட 100% வாக்கு பதிவுவிழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் திருநாவுக்கரசு கொடி அசைத்து துவக்கி வைக்க அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் செங்கம் புதிய பேருந்து நிலையம் முன்பிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story