ஓட்டப்பிடாரத்தில் பிப்.4ல் மினி மாரத்தான் போட்டி

ஓட்டப்பிடாரத்தில் பிப்.4ல் மினி மாரத்தான் போட்டி

மினி மாரத்தான் போட்டி

ஓட்டப்பிடாரத்தில் வரும் பிப்.4ம் தேதி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடக்கிறது. 
ஓட்டப்பிடாரத்தில் வரும் பிப்.4ம் தேதி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடக்கிறது. இதுகுறித்து, ஓட்டப்பிடாரம் வ.உ.சி விளையாட்டுக் கழக தலைவர் சாமுவேல், துணை தலைவர் யோகராஜ், ஒருங்கிணைப்பாளர் பெரியமோகன் ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வ.உ.சி விளையாட்டுக் கழகம் 36ம் ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மினி மாரத்தான் போட்டி வரும் பிப்.4ம் தேதி நடக்கிறது. ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல் நிலைப்பள்ளியில் இருந்து புதியம்புத்துார் சாலையில் நடக்கும் இந்த போட்டியில், மாணவர்கள் 10 கி.மீ, மாணவிகள் 5 கி.மீ, 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் 2 கி.மீ என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியை, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் பஞ்., தலைவர் இளையராஜா ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். போட்டியில், கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரின் தொடர்பு எண் மற்றும் கையெப்பத்துடன் வரும் 31ம் தேதிக்குள் , பி.புகழும்பெருமாள், வ.உ.சி விளையாட்டுக் கழக இணை செயலாளர், ஓட்டப்பிடாரம், (செல் நம்பர்- 6379453112) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் போட்டியில், 6ம் வகுப்புக்குள் படித்துக் கொண்டு இருப்பவர்களாக இருக்கவேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story