ஜன.17ம் தேதி மினி மாரத்தான் போட்டி

ஜன.17ம் தேதி மினி மாரத்தான் போட்டி

மாவட்ட ஆட்சியர் 

ஜன.17ம் தேதி மினி மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் ஜன.17ம் தேதி மினி மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஜன.17ம் தேதி வருகை புரிய உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஜன.17ம் தேதி காலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கப்படவுள்ளது என்றார்.

Tags

Next Story