ஆசிட் கேன்கள் ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்து

ஆசிட் கேன்கள் ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்து

ஆசிட் கேன்கள் ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்து

குடியாத்தம் அருகே ஆசிட் கேன்கள் ஏற்றி வந்த மினி வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம் வி.கோட்டா பகுதிக்கு பேட்டரிகளுக்கு பயன்படும் டிஸ்டில் வாட்டர் மற்றும் ஆசிட் கேன்கள் ஏற்றி வந்த மினி வேன் குடியாத்தம் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் வரும் போது எதிர்பாராத விதமாக மினி வேனில் பின்பக்க டயர் வெடித்து மினி வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

மேலும் ஆட்டோவில் இருந்த திரவ கேன்களும் சாலையில் சரிந்தன.இது குறித்து குடியாத்தம் காவல்துறையினருக்கும், குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக கேன்களை அப்புறப்படுத்தினர் .

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story