குழித்துறையில் கனிமவள லாரி ஆம்னி பஸ் மோதல்

குழித்துறையில் கனிமவள லாரி ஆம்னி பஸ் மோதல்
குழித்துறையில் ஆம்னி பஸ் - டாரஸ் லாரி மோதல்
குழித்துறையில் கனிமவள லாரி ஆம்னி பஸ் மோதிக்ககொண்டது.

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ் மார்த்தாண்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கனிம வளர லாரி ஒன்றும் முன்னால் சென்று கொண்டிருந்தது.

அந்த லாரியை முந்தி செல்ல ஆம்னி பஸ் டிரைவர் பலமுறை முயற்சி செய்தும், கனிம வளலாரி டிரைவர் பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றுள்ளார். குழித்துறை சந்திப்பதில் வைத்து திடீரென கனிம வள லாரி டிரைவர் திடீர் பிரேக் பிடித்தார். இதில் பின்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் லாரியில் மோதி, பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

பஸ்ஸில் இருந்து ஐந்து காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story