அமைச்சர் எ.வ.வேலு கிரிவலப்பாதையில் ஆய்வு

அமைச்சர் எ.வ.வேலு  கிரிவலப்பாதையில் ஆய்வு

கிரிவல பாதையில் அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கிரிவலப்பாதையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது: ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை தீபம் வந்து போகிறது. ஆண்டாண்டுக்கு தீபத்திற்கு வரும் ஆண்மீக பெருமக்களின் கூட்டம் அதிகமாகி கொண்டு செல்கிறது.

சென்ற கார்த்திகை தீபம்-2022 ஆன்மீக பெருமக்கள் மற்றும் முதல்வர் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டும் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று முதல்வர் அவர்கள் கூறியுள்ளார். கடந்த 16-ஆம் தேதி அன்று கார்த்திகை தீபம்-2023 கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.

சில கோரிக்கைகள் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அதையும் அந்த ஆய்வு கூட்டத்தில் மேற்கொண்டோம். 17-ஆம் தேதி முதல் திருவிழா.18-ஆம் தேதி இரண்டாம் நாள் திருவிழா. 19-ஆம் தேதி இன்று மூன்றாம் நாள் திருவிழா. திருவண்ணாமலையில் 14 கிலோமீட்டர் இந்த மலையை சுற்றி கிரிவலம் வருவது புகழ்பெற்றது.

இந்த பாதையை ஆன்மீக பெருமக்கள் வலம் வருவதற்கு ஏதுவாக உள்ளதா என ஆய்வு செய்ய நானும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் ஆய்வு செய்தோம். 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதையை ஆன்மீக பெருமக்கள் காலாணி அணியாமல்தான் கிரிவலம் வருவார்கள்.

பாதை சுத்தமாக உள்ளதா, 24 மணி நேரமும் கிரிவலம் வருவார்கள் அதனால் பாதை பாதுகாப்பாக மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கிறதா, அதனை தொடர்ந்து வருபவர்களுக்கு கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்கிறதா என சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு செய்தேன்.

இன்னும் பல வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகத்திடம் கூறியுள்ளேன். கோயில் சம்பந்தப்பட்ட வசதிகள் 99 சதவீதம் நிறைவாக உள்ளது. ஓரிரு வசதிகள் நாளைக்குள் செய்து தர கூறியுள்ளேன். 8-ஆம் நாள், 9-ஆம் நாள் மற்றும் 10-ஆம் நாள் தீபம் அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள்.

மின்விளக்குகள் கிரிவலப்பாதையில் 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. நாளைக்குள் அனைத்து வசதிகளும் 100 சதவீதம் முழுமையடையும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபத்திருவிழாவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மாதம் மாதம் அதிக கிரிவலம் வருபவர்கள் விவிஐபி-க்கள்,அண்டை மாநில பக்தர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகிறார்கள். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நான் பேசி சட்டமன்ற நிதி பெற்று சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

அதற்காக முதல்வர் அவர்கள் என்னை இங்கே இருந்து அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் மரு.எ.வ.வே.கம்பன், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு பிரதிநிதி ஸ்ரீதரன், பொதுப்பணித்துறை சிறப்பு தலைமை பொறியாளர் (கட்டடம்) மோகனசுந்தரம், உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) கோபாலகிருஷ்ணன். நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல்,

கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, இணை ஆணையர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஜோதி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.ரமணன், திருவண்ணாமலை நகரமன்ற துணைத்தலைவர் ராஜங்கம். திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரித்விராஜ். அருணாச்சலம், வட்டாட்சியர் தியாகராஜன்,

மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story