சமுத்திரம் ஏரியில் சிறுவர் பூங்கா திறப்பு !

சமுத்திரம் ஏரியில் சிறுவர் பூங்கா திறப்பு !

 பூங்கா திறப்பு

ரூ. 8.84 கோடியில் புனரமைக்கப்பட்ட சமுத்திரம் ஏரியில் சிறுவர் பூங்காவை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் ஒன்றியம், மாரியம்மன் கோவில் ஊராட்சி, புளியந்தோப்பு கிராமத்தில் நீர்வளத்துறை சார்பில் ரூ.8.84 கோடி மதிப்பில் சமுத்திரம் ஏரி புனரமைக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வைஜெயந்தி மாலா கேசவன், ஒன்றியக் குழு உறுப்பினர் கவிதா குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் ஒன்றியம் மாரியம்மன் கோவில் ஊராட்சி, புளியந்தோப்பு கிராமத்தில் நீர்வளத்துறை சார்பில் ரூ.8.84 கோடி மதிப்பில் சமுத்திரம் ஏரி புனரமைக்கப்பட்டு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கல்லணைக் கால்வாய் பாசன அமைப்பில் உள்ள சமுத்திரம் ஏரி, தஞ்சாவூர் நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் 6 கிராமங்களில் உள்ள 1,116 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. ஏரியை ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தி, பாசன கட்டுமானங்களை புனரமைத்து, சிறுவர் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டு தற்பொழுது முழுமையாக முடிவடைந்துள்ளன. இவ்வாண்டு சமுத்திரம் ஏரியின் மூலம் 1,116 ஏக்கர் பாசன பரப்பில் இருபோக சாகுபடி ஈட்டப்பட்டுள்ளது. மேலும், தற்பொழுது 30 விழுக்காடு நீர் இருப்பு உள்ளது. இந்த கோடை காலத்தில் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த நீர் போதுமானதாகும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி, நீர்வளத்துறை கல்லணைக் கால்வாய் கோட்டம் செயற்பொறியாளர் ம.பவழக்கண்ணன், காவிரி வடிநிலக் கோட்டம் செயற்பொறியாளர் மா.இளங்கோ, கல்லணைக் கால்வாய் உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் ஆர்.சீனிவாசன், காவிரி வடிநிலக் உபகோட்டம் உதவி செயற்பொறியாள்ர் வ.சிவக்குமார், கல்லணைக் கால்வாய் நகர்பிரிவு உதவி பொறியாளர்கள் எஸ்.சேந்தன் (தஞ்சாவூர்), அன்புச்செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர் சுஜாதா தனசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story