திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய அமைச்சர் மற்றும் எம்எல்ஏ
திமுக பிரதிநிதி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் MLA ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தன.
திமுக பிரதிநிதி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள பூமணம்திருமண மகாலில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் ராமலிங்கம் சகோதரர் சந்திரசேகரன் புதல்வியும், கை களத்தூர் கிளைச் செயலாளர் ராஜேந்திரன் புதல்வன் ஜெயராஜ், மகாலெட்சுமி ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் மேலும் இதில் கலந்து கொண்ட பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது. மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை திமுக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story