பெரம்பலூரில் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை அமைச்சர் வழங்கல்

பெரம்பலூரில் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை அமைச்சர் வழங்கல்

புத்தகங்களை வழங்கிய அமைச்சர்

பெரம்பலூரில் மாணவர்களுக்கு விலை இல்லா பாட புத்தகங்களை அமைச்சர் வழங்கினார்

பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கும் நிகழ்வையும், அரசுப் பள்ளியிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்திடும் முகாமினையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்குதல், ஆதார் கார்டு பதிவு மற்றும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு ஆகிய நிகழ்வுகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஜூன் பத்தாம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசியபோது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி, அரசு பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் இன்று தமிழக முழுவதும் வழங்கப்படுகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சார்ந்த 25,572 மாணவ,மாணவிகளுக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த 34,659 மாணவ,மாணவிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்படவுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் புதிதாக வாங்கப்பட்டுள்ள அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இயங்கி வரும் அரசுப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தம் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகள் அரசுப் பேருந்துகளில் பள்ளிக்குச் சென்று வருவதற்காக புதிய பேருந்து பயண அட்டை வரும் வரை பழைய பேருந்து பயண அட்டையினை பயன்படுத்தலாம். மேலும், மாணவ மாணவிகள் பள்ளிச்சீருடை அணிந்து வந்தால் அவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என தெரிவித்தார். முன்னதாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசிக்க அனைவரும் அவரைத்தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் புதிதாக 1ஆம் வகுப்பு சேர்ந்துள்ள 3,531 மாணவ,மாணவிகளுக்கு தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் பேனா,

பென்சில் உள்ளிட்ட 8 வகையான பொருட்கள் அடங்கிய நார்ப்பைகள் பரிசு பை வழங்கும் பணியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

. இந்நிகழ்வில் சார் ஆட்சியர் கோகுல் பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுதலைவர் மீனா அண்ணாதுரை, ஆட்மா தலைவர் , ஜெகதீசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பாஸ்கர், முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பில் உள்ள அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story