விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் காந்தி

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் காந்தி

ஆறுதல் கூறிய அமைச்சர்

ராணிப்பேட்டை அருகே விபத்தில் காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த போது அமைச்சர் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஸ்ரீ பெரும்புதூரில் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தனியார் தொழிற்சாலையில் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வேலைக்கு செல்கின்றனர். இவர்களை அழைத்து செல்வதற்காக பஸ் உள்ளது.இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஸ்ரீ பெரும்புதூரில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆட்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை பஸ் சென்று கொண்டிருந்தது. காவேரிப்பாக்கம் அடுத்த வாணிசத்திரம் மேம்பாலத்தில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது. மேலும் சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் மோதியது.

இதில் பஸ்சின் முன்புறம் சேதமானது. பஸ்சில் பயணம் செய்த ஊழியர்கள் 18 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம் அடைந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் கலெக்டர் வளர்மதி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காயம் அடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

Tags

Next Story