மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் அமைச்சர் காந்தி ஆய்வு.
அமைச்சர் காந்தி ஆய்வு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாட்டில் கைத்தறி மற்றும் துணிநூல் வளர்ச்சியை மேம்படுத்திடும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் நிதி பங்களிப்புடன் தமிழகத்தில் மொத்தம் 8 ஜவுளி பூங்காக்கள் அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றில் பல்லடம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா, மதுரை ஒருங்கினைந்த ஜவுளி பூங்கா, கொமாரபாளையம் ஹைடெக் நெசவு பூங்கா, கரூர் ஒருங்கினைந்த ஜவுளி பூங்கா ஆகிய 4 ஜவுளி பூங்காகள் பணி நிறைவேற்றபட்டு செயல்பட்டு வருகிறது.
மீதமுள்ள கடலூர், கோபிசெட்டிபாளையம், ஈரோடு. காஞ்சிபுரம் ஆகிய 4 இடங்களில் ஜவுளி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை ஒருங்கினைந்த ஜவுளி பூங்கா கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் தரமான துணி நூல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஜவுளி பூங்காவில் செயல்பாடு மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்து இன்றய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என அமைச்சர் காந்தி தெரிவித்தார்.