மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கிய அமைச்சர்

மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கிய அமைச்சர்

சைக்கிள் வழங்கிய அமைச்சர் 

மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர், மாணவிகளுக்கு வழங்ககூடிய இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது‌ இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு அந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் சுமார் 368-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் வேலையில்லா இலவச மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கினார்‌.

பின்னர் மாணவிகள் மத்தியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில். மிகவும் தன்னம்பிக்கையுடன் படியுங்கள் கல்வி என்பது நம்முடைய அறிவாற்றலை கூர்மையாக ஆக்கக்கூடியதும் அறிவாற்றலை தரக்கூடியதும் ஒன்று மாணவிகள் நல்ல சிந்தனையாளர்கள் கல்வியாளர்களாக வர வேண்டும் என்ற அவர் படிப்பு என்பது அரசு வேலைக்குதான் என்பது இல்லை.

படிப்பு என்பது நமது அறிவு ஆற்றலை பெருக்கி கொள்ளவும் உதவும் அதைபோல் படித்து முடித்தவுடன் அரசு வேலையை மட்டும் நம்பி இல்லாமல் சுயதொழில் செய்யலாம் தனியார் பணிகளையும் செய்யலாம் என்றார் மேலும் பேசுகையில் ஏதோ ஒரு வகையில் நம் படிப்பு என்பது சமுதாயத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் அதைபோல் எதிர்காலத்தில் நமது குடும்பத்தினருக்கு உதவியாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் படியுங்கள் தன்னம்பிக்கை-வுடன் இருங்கள் நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை முயற்ச்சி என்பது

செய்வது எல்லாம் எளிதாக கிடைக்கும் என்ற அவர் முதல்வர் அடிக்கடி செல்வது ஒன்றுதான் கல்வித்துறையும் ,சுகாதாரத்துறை-யும் எனது இரு கண்கள் வருங்கால சமுதாயத்தை உருவாகக்கூடிய ஒன்று என்பார் அதைபோல் மாணவர்களாகிய உங்களை எல்லாம் பண்பாளர்களாக உருவாகக்கூடிய துறை இந்த கல்வி என்பது எனவே அனைவரும் சான்றோர்களாக படித்து வெளியே வர வேண்டும் என வாழ்த்துகின்றேன் என மாணவிகள் மத்தியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.

Tags

Next Story