நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் கீதா ஜீவன்.
கோடை வெயில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை அமைக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் மோர் இளநீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், எட்டயபுரம் சாலை, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பந்தலை வட்டச் செயலாளர் கதிரேசன், மண்டல தலைவி கலைச்செல்வி திலகராஜ் ஆகியோர் தலைமையில் அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், மற்றும் பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அமைச்சரிடம் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி அருந்தினர். இதேபோல் தூத்துக்குடி மாநகர திமுக சாலையில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட குடிநீர் பந்தலை மாநகரச் செயலாளர் எஸ்.ஆர் ஆனந்த சேகரன் தலைமையில் அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
இந்த நீர் மோர் பந்தலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் இளநீர் தர்பூசணி குளிர்பானம் நுங்கு உள்ளிட்டவர்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி கல்வி குழு தலைவர் அதிர்ஷ்ட மணி ரவீந்திரன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மகளிர் அணி ரேவதி, உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.